இளைய தளபதி விஜய் அவர்கள் தற்போது மாஸ்டர் திரைப்படத்தின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகின்றார் என்பது எல்லோரும் அறிந்த விடயம்.
மாஸ்டர் திரைப் படத்தின் ஷூட்டிங் இடம்பெற்றுவரும் இடத்தில் தினமும் ஏராளமான ரசிகர்கள் அவரை காண ஒன்று கூடுகின்றனர். ரசிகர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து அங்கு ஏராளமான போலீசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது யாவரும் அறிந்ததே.
இந்தநிலையில் தளபதி விஜய் அவர்கள் தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் அங்கிருந்த ஒரு வேன் ஒன்றின் மீது ஏறி தனது செல்போனில் ரசிகர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டுள்ளார்.அவர் செல்பி எடுத்த காட்சியை பல ரசிகர்களும் வீடியோவாக பதிவு செய்து அதனை தமது சோஷியல் மீடியாக்களில் பதிவேற்றி செய்து வந்தனர்.
இந்த நிலையில் தளபதி விஜய் அவர்களே தனது ஆபீஷியல் ட்விட்டர் பக்கத்தில் தான் எடுத்துக் கொண்ட செல்ஃபியை பதிவேற்றியுள்ளார்.இந்தப் புகைப்படம் ஆனது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
No comments:
Post a Comment