2019
ஆம் ஆண்டுக்கான சிறந்த படங்களை கௌரவிக்கும்
92 ஆவது அகடமி விருது வழங்கும் விழா பெப்ரவரி 9 ஆம் திகதி 2020 அன்று நடைபெற்றது.இவ்விழா ABC யில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இது கலிபோர்னியாவில்
உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் எனும் இடத்தில் உள்ள டால்பி தியேட்டரில்
தொடர்ந்தும் 18வது முறையாக நடைபெற்றது.
ஆஸ்கார் விருது என்பது ஆங்கில திரைப்படங்களுக்கான ஒரு விருது வழங்கும் விழா வாகும். பெரும்பாலும் இதில் ஆங்கில படங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பது வழமை. இருப்பினும் சில வெளிநாட்டு திரைப்படங்களுக்கும் இங்கு அங்கீகாரம் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயம்.
அந்த வகையில் இந்த முறை ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் ஒரு வரலாற்றுச் சாதனையாக பராசைட் திரைப்படம் 4 விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.சிறந்த திரைப்படம், இயக்கம் சர்வதேச அம்சத் திரைப்படம் மற்றும் எழுத்து ஆகிய பிரிவுகளில் பராசைட் திரைப்படம் 4 விருதுகளையும்
வென்றுள்ளது.
அதுமட்டுமல்லாது ஆஸ்கார் வரலாற்றில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை தட்டிச் சென்ற முதல் ஆங்கிலம் அல்லாத திரைப்படமாக பராசைட்விளங்குகின்றது.
No comments:
Post a Comment