எதிர்வரும் 6 ஆம் திகதி இரவு 8 மணி முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை நாடாளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், நாளாந்த இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவன செயற்பாடுகளை இயல்புநிலைக்கு கொண்டுவரும் நடவடிக்கை எதிர்வரும் 11 திகதி ஆரம்பமாகும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நிறுவனங்களை திறந்து, பணிகளை மேற்கொள்ளும்போது, கொவிட்-19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட சுகாதார அதிகாரிகள் வழங்கியுள்ள வழிகாட்டல்களை, முழுமையாக பின்பற்றுவதை நிறுவனத் தலைவர்கள் உறுதிசெய்தல் வேண்டும். தனியார் துறை நிறுவனங்களை திறக்கும் நேரம் முற்பகல் 10 மணி என உத்தரவிடப்பட்டுள்ளது.
கட்டாயமாக தொழிலுக்கு சமூகமளிக்க வேண்டியவர்கள் தவிர ஏனைய மக்கள் நோய் நிவாரணத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் வீடுகளில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
No comments:
Post a Comment