நாட்டில் நேற்றைய தினத்தில் (07) கொரோனா தொற்றுக்குள்ளாகிய 27 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 25 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
துபாயில் இருந்து நேற்று வருகை தந்த ஒருவர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அவருக்கு COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறினார்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 824 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
COVID-19 தொற்றுக்குள்ளான 575 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 17 பேர் நேற்று குணமடைந்ததுடன், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 240 ஆக அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment