ஒவ்வொரு ஆண்டும் தனிப்பட்ட பிரிவுகளை தவிர்த்து, ஒட்டுமொத்தமாக அதிக விருதுகளை எந்த திரைப்படம் அள்ளி செல்கிறது என்ற தகவல் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும்.
அந்த வகையில், இந்த ஆண்டு ஆஸ்கர் விழாவில் அதிகபட்சமாக நான்கு விருதுகளை 'பாராசைட்' திரைப்படமும், மூன்று விருதுகளை '1917' திரைப்படமும், 'ஒன்ஸ் அப்பான் ய டைம் இன் ஹாலிவுட்', 'ஜோக்கர்', 'போர்ட் vs பெர்ராரி' ஆகிய திரைப்படங்கள் தலா இரண்டு திரைப்படங்களையும் வென்றுள்ளன.
சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை 'ஸ்டோரி 4' வெல்ல, அதை அத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஜோனாஸ் பெற்றுக்கொண்டார்.
சிறந்த குறும் ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை 'லேர்னிங் டு ஸ்கேட்போர்டு இன் ய வார் சோன் (இப் யூ ஆர் ய கேர்ள்)" எனும் திரைப்படம் தட்டிச்சென்றது. சென்ற ஆண்டு இதே பிரிவிற்கான விருதினை, மலிவு விலை நாப்கினை உருவாக்கிய கோயம்புத்தூரை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் நடித்த 'பீரியட். எண்டு ஆஃப் சென்டன்ஸ்' வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment