கொரோனா வைரஸ் காரணமாக சீனாவின் அதிகரித்த மரணங்கள் - globalyard

Do you know?


Thursday, February 13, 2020

கொரோனா வைரஸ் காரணமாக சீனாவின் அதிகரித்த மரணங்கள்


கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை நடந்த மரணங்களில் புதன்கிழமைதான் மிக அதிகம்.


இதேபோல் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட நபர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக அதிகரித்துள்ளது.

மேலும் 14,840 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 60 ஆயிரம் பேருக்கு தொற்று - 1350 பேர் மரணம்

புதன்கிழமை இறந்தவர்களையும் சேர்த்து சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை - 1350 ஆக உயர்ந்துள்ளது. நோய்த் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் 60 ஆயிரம் என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது.



கடந்த சில நாள்களாக புதிதாக நோய்த் தொற்று கண்டுபிடிக்கப்படுகிறவர்கள் எண்ணிக்கை மட்டுப்பட்டு வந்த நிலையில், புதன்கிழமை திடீரென்று அது பல மடங்கு உயர்ந்ததற்கு, நோய் இருப்பதை உறுதி செய்யப் பயன்படுத்தும் அளவு கோல் விரிவாக மாற்றப்பட்டுள்ளதே காரணம்.



No comments:

Post a Comment