ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் உள்ள 2 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு - globalyard

Do you know?


Thursday, February 13, 2020

ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் உள்ள 2 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு


ஜப்பானில் சிக்கியுள்ள `டைமண்ட் பிரின்ஸஸ்` என்னும் கப்பலில் பாதிக்கப்பட்டவர்களில் இந்தியர்களும் உள்ளனர் என்று கூறப்பட்ட நிலையில், அந்த கப்பலில் உள்ள இரண்டு இந்தியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


"டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகம் இந்த கப்பல் பணியாளர்கள் மற்றும் பயணிகளிடம் தொடர்பில் உள்ளது. தற்போது பயணிகளும், கப்பல் ஊழியர்களும் ஜப்பான் அதிகாரிகளால் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்," என்றும் ஜெயசங்கர் மேலும் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment