பிரித்தானியாவில் சியாரா புயல் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. - globalyard

Do you know?


Wednesday, February 12, 2020

பிரித்தானியாவில் சியாரா புயல் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.




பிரித்தானியாவில் சியாரா புயல் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
மணிக்கு100 மைல் வேகத்தில் வீசிய இப் புயலின் காரணமாக வடக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான ரயில்கள் மற்றும் விமான போக்குவரத்துக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

புயல் காரணமாக கடுமையான கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதன்காரணமாக கடலோரப் பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.


காற்றின் வேகம் காரணமாக வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கிரேன்கள் உடைந்து நொறுங்கி விழுந்தன. மேலும் சியாரா புயலால் பிரித்தானியா மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கபட்டுள்ளது.



No comments:

Post a Comment